இந்தியாவில் நீட் தேர்வின் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றப்பட்ட வினாத்தாள்களுக்கு விடையளிப்பது குறித்து சென்னை நீட் தேர்வு பயிற்சி இயக்குனர் லிம்ரா விளக்கமளித்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள்:
இந்தியாவில் பொது, பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இந்திய அளவில் நீட் என்னும் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் இணையம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, மாநிலங்கள் தோறும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகளின் விளைவாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வின் வினாத்தாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். இந்தாண்டு முதல் 200 கேள்விகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் 180 கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் A , B என 2 பிரிவுகள் இருக்கும். A பிரிவில் 35 கேள்விகள் இடம்பெறும். இவை அனைத்திற்கும் கட்டாயமாக விடையளிக்க வேண்டும் எனவும் B பிரிவில் 15 கேள்விகள் இருக்கும். அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது என மாற்றப்பட்ட வினாத்தாள்களுக்கு விடை அளிப்பது குறித்து சென்னை நீட் தேர்வு பயிற்சி இயக்குனர் லிம்ரா விளக்கமளித்துள்ளார். தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களது மொழியை குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.