Breaking

Sunday, June 14, 2026

மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் குழு



மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர் குழு A team of teachers to guide students on higher education.

அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு வழிகாட்ட ஆசிரியர்களை நியமிக்கும்படி, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட, 250 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில், 'எமிஸ்' இணையதளத்தின் வாயிலாக, வரும் 30ம் தேதிக்குள், ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.

அவர்கள், மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வையும், முழுமையான தகவல்களையும் அளித்து, உயர் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog