ICSE, ISC 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 31, 2021

Comments:0

ICSE, ISC 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!

இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்கள் மேம்பாட்டு தேர்வுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இறுதி மதிப்பெண்கள்:

நடப்பாண்டு இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்வுக்கு மொத்தம் 2,422 பள்ளிகள் விண்ணப்பித்தன. மேலும் 1,166 பள்ளிகள் 12ம் வகுப்பு இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இன்று, CISCE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முடிவுகளை அறிவித்தது. கொரோனா 2ம் அலை காரணமாக அனைத்து பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்கள் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய கல்வி ஆண்டுகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மதிப்பெண் பெற்ற பாடங்கள் மற்றும் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டது. சிஐஎஸ்சிஇ தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அரத்தூன் அவர்கள், 10 ஆம் வகுப்பில் 99.98 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பில், பெண்களின் தேர்ச்சி சதவீதம் 99.86 சதவிகிதம், ஆண்களின் தேர்ச்சி 99.66 சதவிகிதம் ஆக உள்ளதாக தெரிவித்தார். நடப்பு ஆண்டில் விடைத்தாள் மறுபரிசீலனை செய்வதற்கு மாணவர்கள் கோரிக்கை செய்ய முடியாது. ஏனெனில் அரசு வகுத்துள்ள மதிப்பீடு முறையின் படியே மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம் அரசு வழங்கும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் நேரடி தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. அதன்படி, மேம்பாட்டு தேர்வுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி இறுதி நாள் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews