தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு – அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 31, 2021

Comments:0

தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த 2013 -14 ஆம் கல்வியாண்டில் துவங்கிய 26 மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 624 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஊதிய நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு

தமிழகத்தில் கடந்த 2013 -14 ஆம் கல்வியாண்டில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரிப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஊதிய நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பின் தங்கியுள்ள 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள் கடந்த 2013 -14 ஆம் கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இப்பள்ளிகளில் 17 ஆசிரியர்கள் மற்றும் 7 ஆசிரியரல்லாத பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தற்காலிக பணியாளர்கள் ஏற்படுத்தப்பட்டனர். அதன் கீழ் தமிழகத்தில் மொத்தமாக செயல்பட்டு வரும் சுமார் 44 மாதிரி பள்ளிகளில் பணி செய்து வரும் ஊழியர்களின் செலவினங்களை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டு தற்போது ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலர், அனைத்து மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கருவூலங்களுக்கு அனுப்பியுள்ள ஆணையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கூடுதலாக தேவைப்படும் 7,979 பணியிடங்களில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த பணியிடங்களில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31 வரையுள்ள 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த ஊழியர்களுக்கான மாத ஊதியம் மற்றும் கூடுதல் படிகளுக்கான தொகையை கருத்தில் கொண்டு ஊதிய நீட்டிப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பணியிடங்களை 2021 ஏப்ரல் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மேலும் மூண்டு ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசிற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews