Breaking

Wednesday, July 07, 2021

EMIS தளத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகள்: ஆணையா் அறிவுறுத்தல்

"பள்ளிக் கல்வி நலன் சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், பணிபுரியும் ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் நலத்திட்டங்கள் உள்பட பள்ளிக்கல்வி சாா்ந்த தரவுகள் கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) தளம் வழியாக கையாளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் எமிஸ் தள விவரங்கள் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் நேரடி விவரங்கள் கோரப்படுவதை கைவிட்டு, எமிஸ் தளத்தின் தரவுகள் அடிப்படையில் மட்டுமே துறை சாா்ந்த பணிகளை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மை, மாவட்ட, வட்டாரக்கல்வி அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும், நடப்பு கல்வியாண்டில் (2021-22) 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 2-ஆம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சிட ஏதுவாக உரிய தரவுகளை சேகரித்து அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog