சிறப்பான எதிர்காலத்துக்கு ஏற்ற படிப்புகளாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் விளங்குகின்றன என்று ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றதொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 10 நாட்கள் நடக்க உள்ளது.
கடந்த 24-ம் தேதி நடந்த 7-வது நிகழ்வில் ‘ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள்’ என்றதலைப்பில் இத்துறை வல்லுநர்கள் பேசியதாவது: ஆந்திரா சிட்டியில் உள்ளஅல்ஸ்ட்டம் (ALSTOM) குவாலிட்டிடைரக்டர் எஸ்.சண்முகசுந்தரம்: பொறியியல் துறையின் ஒருங்கிணைந்த படிப்புகளாக மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் படிப்புகள் விளங்குகின்றன. ‘மெக்கானிக்கல் படித்தால் கடினமான வேலைசெய்ய வேண்டும், சம்பளம் குறைவாக கிடைக்கும்’ என்ற எண்ணம் தவறானது. இன்று அனைத்து பெரிய நிறுவனங்களிலும் மெக்கானிக்கல் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கின்றனர், அதிகசம்பளம் பெறுகின்றனர். முன்புகம்பெனிகள் குறைவு. தற்போது மகேந்திரா, மாருதி. ஹோண்டா என பல நிறுவனங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் கம்பெனிகள் தொடங்குவதற்கான சிறந்தமாநிலமாக தமிழகம் உள்ளது. மெக்கானிக்கல் படிப்பை பொருத்தவரை மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ், நானோ டெக்னாலஜி, நியூ மெட்டீரியல், கம்ப்யூட்டர் எய்டட், ஜியோமெக்கானிக்கல் என பல நவீன படிப்புகளுடன் பெரிய துறையாக வளர்ந்துள்ளது. 4.0 எனப்படும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்த துறையிலும் நல்ல வளர்ச்சியும், அதிகதேவையும் ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்கல் படித்து வருபவர்களிடம் கம்பெனிகள் ஏராளமான புதியகண்டுபிடிப்புகளை எதிர்பார்க்கின்றன. சிறப்பான எதிர்காலத்துக்கு ஏற்றதாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் உள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.