தேசிய திறனறி போட்டி: ஆசிரியர்களுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

தேசிய திறனறி போட்டி: ஆசிரியர்களுக்கு அழைப்பு

தேசிய அளவிலான திறனறிப்போட்டியில் பங்கேற்க, பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., மற்றும் விபா நிறுவனம் சார்பில், மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, தேசிய அளவில் அறிவியல் திறனறித்தேர்வை நடத்துகிறது. தற்போது, பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் 'ஆன்லைன்' வாயிலாக கருத்தரங்கம், வீடியோ பதிவு, கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.அவ்வகையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 'ஆகார்கிராந்தி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் போட்டி நடத்தப்படுகிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் கல்லுாரி வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்ளலாம். வரும், 26 முதல் ஆக., 23ம் தேதி வரை, திங்கள் தோறும், மாலை, 7:00 முதல், 8:00 மணி வரை கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.அதேபோல், வீடியோ பதிவு போட்டிக்கு, உள்ளூர் பழங்கள், காய்கறிகள், சரிவிகித உணவு, பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் மூன்று முதல் ஐந்து நிமிட வீடியோவை பதிவிடலாம்.இல்லையெனில், கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் என, ஏதேனும் ஒரு முறையில், தங்களின் படைப்புகளை அனுப்பலாம்.தேசிய அளவில் தேர்வு செய்யப்படுவோருக்கு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். வரும், 24ம் தேதிக்குள், http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவரம் அறிய, 8778201926 எண் அல்லது vvmtamilnadu@gmail.com என்ற இமெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என, ஆகார்கிராந்தி -வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews