தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தடை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1 ஆண்டாக திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேரடி வகுப்புகள் இல்லாத காரணத்தால் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் காலதாமதமாக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 19 ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனித்தேர்வு மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை இல்லை என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.