தமிழகத்தில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்து கலிங்கன் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியில் இருப்பார் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் நியமனம்:
இந்தியா முழுவதும் மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி தற்போது திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முத்து கலிங்கன் கிருஷ்ணன் அவர்களை மத்திய கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது.
இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக முத்துகலிங்கன் கிருஷ்ணன் பணியாற்றியவர். மேலும் லண்டனில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். தனது உழைப்பால் தொடர்ந்து உயர்ந்து உயர் பதவிகளை அடைந்து வருகிறார். தற்போது மேலும் கூடுதல் பொறுப்பாக திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் அல்லது 70 வயது வரை தொடர்ந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிப்பார் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.