தமிழகம் உள்ளிட்ட 12 மத்திய பல்கலைக்கு துணைவேந்தர்கள் நியமனம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 24، 2021

Comments:0

தமிழகம் உள்ளிட்ட 12 மத்திய பல்கலைக்கு துணைவேந்தர்கள் நியமனம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தது போல், நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணைவேந்தர்கள் நியமனம்:

ஜூலை 19ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் நாட்டின் பல முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாட்டில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய பல்கலைகளில் 22 துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார். அவற்றில் 12 இடங்களுக்கு துணைவேந்தர் நியமனம் குடியரசு தலைவரால் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், இமாச்சல பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கயாவில் உள்ள தெற்கு பிஹார் மத்திய பல்கலைக்கழகம் , மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் (MANUU), வடகிழக்கு மலை பல்கலைக்கழகம் (NEHU), பிலாஸ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة