வீடு தேடி வரும் ஆதார் சேவை, மொபைல் எண் அப்டேட் – புதிய வசதி அறிமுகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

வீடு தேடி வரும் ஆதார் சேவை, மொபைல் எண் அப்டேட் – புதிய வசதி அறிமுகம்!

"உங்களது ஆதார் அட்டையில் திருந்தங்கள் இருப்பின் அதனை ஆன்லைன் முறையில் செய்வதற்கு பல வசதிகளை அரசு அறிவித்துள்ள நிலையில், உங்களது தொலைபேசி எண்ணை வீட்டிற்கே வந்து மாற்றிக் கொடுக்கும் முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்:
இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசிய சான்றாகும். அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான எண்ணுடன் வழங்கப்பட்டிருக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதார் அட்டையின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டிய விவரங்களை ஆன்லைனில் மாற்றும் வசதியினை UIDAI முன்னதாக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு புதிய முறையில் அப்டேட் செய்வதற்கு ஒரு வசதியினை அறிமுகம் செய்து வருகிறது. இந்த புதிய திட்டத்திற்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) இரண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் போஸ்ட்மேன் உதவியுடன் வீட்டு வாசலில் ஆதார் அட்டையில் மொபைல் எண்களை புதுப்பிக்கலாம். இதற்காக 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும், கிராமின் டக் சேவக்ஸ் (ஜி.டி.எஸ்) உடன் இந்த சேவை வழங்கப்படும்.

ஆனால் இதற்காக பயோமெட்ரிக் தொடர்பான திருத்தங்களுக்கு ரூ.100 மற்றும் மொபைல் நம்பர் அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம் ஆக வசூலிக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டைப் இந்த முறையில் ஆர்டர் செய்து பெறலாம். ஆதார் எண், இமெயில் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் uidai.gov.in அல்லது resident.uidai.gov.in மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்காக ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆதார் பி.வி.சி தபால் மூலம் பயனர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews