தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேனி, சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்ட மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
மதுரை தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி கோரியது. அதற்கு வரும் கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், 150 மாணவர்களை சேர்த்து கொள்ள எய்ம்ஸ் நிர்வாகம் தமிழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டிட பணிகள் முடியும் வரை மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களை மாணவர்களை சேர்க்கலாம் என மத்திய அரசு ஆலோசனை வழங்கியது.
தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்றும், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பு ஆகிய பணிகளை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு தமிழக நல்வாழ்வுத் துறைக்கு உயர்நீதிமன்றம் தனது பாராட்டுகளை தெரிவித்தது. மேலும் வழக்கை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிகளில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்காலிக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த வழக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.