தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு பணிகள் பெற மாவட்ட அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயமாகும். பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் வழங்கபடுகிறது. மேலும் அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் அடிப்படையிலும் அரசு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பகத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம் பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதிகளையும் பதிவு செய்வது அவசியம். இந்த நிலையில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிந்து வேலை கிடைக்காமல் உள்ளனர். கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர்.
அதனால் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாயும், தேர்ச்சி பெறாதவர் எனில் 200 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் வழங்கப்படும். மேலும் கல்லூரி இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கு 600 ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் உதவித்தொகை பெற பட்டியலினத்தவர் 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், மற்ற பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை இணைத்து தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.