தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 11، 2021

1 Comments

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணி புரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி திட்டத்திற்காக ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நிதி திட்டம்

தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அகில இந்திய சேவைகளின் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பாக ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது 01.01.1997 முதல் அமலுக்கு வரும் ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை திரும்ப பெறுவதற்காக அரசு ஓய்வூதியதாரர்கள், தமிழக கேடரைச் சேர்ந்த அகில இந்திய சேவைகளின் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு மொத்த தொகையை செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த அரசு ஊழியர்கள் அனைவரும் அரசின் கருவூலங்கள், துணை கருவூலங்கள் மற்றும் மாநிலத்திற்கு வெளியே உள்ள பொதுத்துறை வங்கி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அதவது தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரர்கள் இறக்கும் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.20 வரை பங்களிப்பு கழிக்கப்படுகிறது.

தவிர ஓய்வூதியம் பெறுவோர் ஒருவேளை இறக்க நேரிட்டால் அவர்கள் செலுத்தி வந்த நிதிக்கு ஒரு வருடம் பங்களித்த பின்னர், அவரது மனைவிக்கு ரூ.25,000 வரை தொகை வழங்கப்படும். அல்லது அந்த ஓய்வூதியதாரரின் மனைவி உயிருடன் இல்லை என்றால், குறிப்பிட்ட அந்த தொகையானது பரிந்துரைக்கப்பட்டவருக்கு செலுத்தப்படும். இது ஓய்வூதியதாரர்களுக்கு பங்களிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் சுய ஆதரவு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

هناك تعليق واحد:

  1. மாத சந்தாவை 150 ஆக வசூல் செய்யும் பட்சத்தில் ஓய்வூதியர் களுக்கு 100000/ குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கல் வேண்டும்.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة