தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள் அனைத்தும் ஜூலை மாதம் 20 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சான்றிதழ்
கொரோனா பேரிடர் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தற்போது ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் மத்திய அரசின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அவர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் மத்திய அரசின் Fit India Movement சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
தற்போது வரை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மிகக்குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே மத்திய அரசின் சான்றிதழுக்காக பதிவு செய்துள்ளது. அதனால் மற்ற பள்ளிகளும் வரும் ஜூலை 20 ஆம் தேதிக்குள் இந்த சான்றிதழுக்காக பதிவு செய்து அவற்றை பெற்றிருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.