மருத்துவ படிப்பில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% வழங்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

Comments:0

மருத்துவ படிப்பில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% வழங்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் தமிழக அரசு, சமூக நீதிக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும், ஏன் 27 சதவீதம் அளிக்கப்படுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவிடம் கடந்த 2020 ஆண்டே, கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், கடந்த 2017 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால், 11,000க்கும் மேற்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ். மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்றும், 40க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான சங்கங்கள், அப்போதைய ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கைகள் அளித்தன. அதன் பின்னரும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?. எனவே, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடனடியாக தலையிட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதத்தை, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பெற்றுத் தர, ஆணையிட வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews