கேரளாவில் இன்று +2 தேர்வு முடிவுகள் – ஆன்லைனில் வெளியீடு!
கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் கேரளாவில் நடந்து முடிந்துள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 87.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக மாநிலங்கள் தோறும் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. எனினும் கேரளா மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 28) வெளியாகியுள்ளது. அதாவது இன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.dhsekerala.gov.in மற்றும் www.keralaresults.nic.in, www.results.kite.kerala.gov.in என்ற கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பெயர் மற்றும் பதிவு எண்களை கொடுத்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3,28,702 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். அதாவது + 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 87.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்ச்சி எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட 2.81% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.