பள்ளி மாணவர்களின் பெற்றோரின் அனுமதியுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூலை 16 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
ஹரியானா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் பரவல் தாக்கமானது குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னாக உருவான பெருந்தொற்று கட்டுப்பாடுகளாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் பெற்றோரின் அனுமதியுடன் ஜூலை 16 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.
அதாவது பள்ளிகளை திறப்பதில் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூலை 16 ஆம் தேதி முதலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 23 முதலும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹரியானாவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.