தமிழகத்தில் கொரோனா 3வது அலையை தடுக்கும் நோக்கில் மாநிலத்தில் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தடுப்பூசி செலுத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மாணவர்கள் விவரம் சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா மூன்றாவது அலை:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்கும் என்றும் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகத்தில் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை அதாவது, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து தற்போது சேலம் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, சேலம் மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் எண்ணிக்கை 1.89 லட்சம் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த கணக்கு பட்டியல் சுகாதாரத்துறைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை கூறியதாவது, சேலம் மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் எண்ணிக்கை 1.89 லட்சமாக இருக்கையில் அவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை ஆராய்ந்து தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களில் 250 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் 33 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.