தனியார் மையங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் E-vouchers முறையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
மத்திய அரசின் புதிய திட்டம்:
மத்திய அரசு நாட்டில் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க பல்வேறு முறைகளையும் கையாண்டு வருகிறது. கடந்த மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது நாடு முழுவதும் குறையத் தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,123 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. நேற்று கொரோனா தடுப்பூசி தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜூன் 21ம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக பிரதம மந்திரி மோடி அறிவித்தார். அது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒன்றாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவும் வகையில் மத்திய அரசு இ-வவுச்சர் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மாற்றங்கள் தேவைப்படும் போது திருத்தங்கள் அறிவிக்கப்படும். இந்த திட்டம் குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த வவுச்சர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தடுப்பூசி மையத்தில் ஸ்கேன் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு சர்வீஸ் சார்ஜாக ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.