பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 24، 2021

Comments:0

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை!

மாணவர்கள் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வந்து படிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழுவினர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2021- 2022 புதிய கல்வி ஆண்டு தற்போது தொடங்கப்பட்டு விட்டது. தற்போது கொரோனா 3ம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரில் வந்து நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். மேலும், குறைந்த அளவில் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும் வகையில் நேரத்தை மாற்றியமைத்து, மாற்று நாட்கள் முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பாதிப்பு குறைவாக உள்ள பல மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறப்பதற்கான ஆலோசனை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதேபோல், ஹைதராபாத் நகரத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூலை 1ம் தேதி முதல் அங்கு கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. தற்போது அங்கு மாணவர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة