தேசிய நல்லாசிரியர் விருது 2021 விண்ணப்ப பதிவு – விண்ணப்பிக்க கால அவகாசம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 24، 2021

1 Comments

தேசிய நல்லாசிரியர் விருது 2021 விண்ணப்ப பதிவு – விண்ணப்பிக்க கால அவகாசம்!

2020-21 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது:
நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தகுதியுடைய ஆசிரியர்கள் வருகிற 20 ஆம் தேதி http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது. 2020 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணியாற்றிருக்க வேண்டும். அலுவலகப்பணி, நிர்வாக பணி மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்க கூடாது. மனிதவள மேம்பாட்டு துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூன் 20 என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة