தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பது குறித்து தமிழக கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
கால்நடை மருத்துவம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து குறைவாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உயர் கல்வி வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதற்கான இணையவழி சேவையை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை எப்போது என்று மாணவர்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது, கால்நடை மருத்துவ கல்லூரியின் உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்க கோரிக்கை எழுந்தால் அதை தமிழக அரசு கட்டாயம் நிறைவேற்றும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.