தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த படி, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளின் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழக அரசு விதித்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். இதற்கிடையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் வலியுறுத்தலின் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தது. இது தவிர சத்துணவு, அங்கன்வாடி, கிராம வருவாய் உதவியாளர்கள் போன்றவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கப்படும். கொரோனாவால் முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையில் தற்போது தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடந்து முடிந்துள்ள சட்டசபை கூட்டத்தொடரின் போது, புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்வது குறித்த எவ்வித தகவல்களும் கவர்னர் உரையில் கொடுக்கப்படவில்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல மருத்துவத்துறையில் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்வது, காலமுறை சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதுபோல சத்துணவு காலமுறை சம்பளம், அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.