தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் எழுத்து தேர்வின் அடிப்படையில் பட்டியலை தயாரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நேர்காணல் :
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் அதன் அதன் பிறகே அரசு பணி உறுதி செய்யப்படும். நேர்காணலின் போது துறைசார் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். அவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவை சரியாக இருப்பின் பணி வழங்கப்படும்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் அரசு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நேர்முகத் தேர்வில் முறைகேடு நடப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் துணை ஆட்சியர்கள், டிஎஸ்பி, துணை ஆணையர்கள் போன்ற உயர் அதிகாரிகள் நியமனத்திற்கான குரூப்-1 பிரிவை தவிர, மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்திலும் நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துகிறார். அவர் , தமிழகத்திலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எழுத்துத் தேர்வுகளில் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்து பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். எனவே ஆந்திராவை போல தமிழகத்திலும் அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.