தமிழகத்தில் ஜூன் 28 முதல் கல்லூரி தேர்வுகள் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இணையம் வழியாக வருகிற ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என பல்கலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
கல்வியியல் கல்லூரி தேர்வுகள் :
தமிழக்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் ஏதும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை வகுப்புகள் இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. அலகு தேர்வுகள், பருவத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் போன்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுகிறது. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மாணவர்களுக்கான பி.எட்., எம்.எட் பருவத்தேர்வுகள் இணையம் வழியாக நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது வரும் ஜூன் 28ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வை எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன் படி சரியான முறையில் தேர்வை எழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பே உரிய மொபைல், கம்பயூட்டர், லேப்டாப் சாதனங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். கருப்பு நிற பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்தி 40 பக்கங்களுக்கு மிகாமல் தேர்வுகளை எழுத வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான வருகையை மாணவர்கள் காலையில் 9:30 முதல் 10:00 மணிக்குள்ளும், மதியம் 1.30 மணி முதல் 2:00 மணிக்குள்ளும் பெயர், பதிவு எண் விபரங்களை வாட்ஸ்ஆப் மூலம் முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தேர்வு முடிந்தவுடன், ஒரு மணி நேரத்தில் விடைத்தாளை ஸ்கேன் செய்து, இ-மெயில், வாட்ஸ்ஆப் மூலம் பி.டி.எப்., வடிவில் கல்லுரிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு தேர்வு இறுதிநாள் அல்லது மறுநாள் விரைவு அல்லது பதிவு தபால் மூலம் கல்லுாரிக்கு விடைத்தாள்களை அனுப்ப வேண்டும் பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.