காட்டாங்கொளத்தூர் SRM அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்டாங்கொளத்தூர் SRM அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து SRM நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “SRM நிறுவனத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 2021 ஆம் ஆண்டுக்கான பி.டெக், பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு மூலமாக நடைபெறுகிறது. இந்த நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்வு மே 23, 24 ஆம் தேதிகளிலும், இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முதற்கட்ட தேர்வுகளுக்கு மே 15 ஆம் தேதி முதலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்வுகள் நாடெங்கும் டெல்லி, சென்னை உள்ளிட்ட 127 நகரங்களிலும், துபாய், தோஹா, மஸ்கட், பஹ்ரைன், குவைத் போன்ற வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது.
Search This Blog
Wednesday, May 12, 2021
Comments:0
SRM கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – மே 15 முதல் விண்ணப்ப பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.