பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி?: சுகாதாரத்துறை விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 19, 2021

1 Comments

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி?: சுகாதாரத்துறை விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைகிறது. இதனால், ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: * 10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் (O2) அளவை சரிபாக்கவும்
* கருவியை பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்.
* ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்தவும்.
* கருவியில் தெரியும் ஆக்சிஜன் அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்.
* சில விநாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் அளவையும், நாடி துடிப்பையும் குறித்து கொள்ளவும். * விரல்களில் மருதாணி, நகபூச்சு, ஈரம் மற்றும் குழுமை ஆக்சிஜன் அளவை தவறாக காட்ட கூடும்.
* ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் பார்க்கவும்.
* தொடர்ந்து 94% கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும். மேலும் மருத்துவ உதவிக்கு இலவச சேவை உதவி மையம் 104 அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. கொரானா தடுப்பூசி மூலம் பக்க விளைவுகள் குறித்து குழப்பத்திற்கு மக்கள் மத்தியில் இடம் பெறக் கூடாது.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews