ரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஆகஸ்ட், 31க்குள் முடித்து, செப்., 1ல் வகுப்புகளை துவங்குமாறு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கான, புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளில் தொடர்ந்து, &'ஆன்லைன்&' வகுப்புகளை மட்டும் நடத்தவும், மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு நடவடிக்கைகளை ஆன்லைனில் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2021 - 22ம் கல்வி ஆண்டுக்கான, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் 31க்குள் முடிக்குமாறு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து, கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, ஜூன், 30க்குள் அங்கீகாரம் வழங்க வேண்டும்; இணைப்பு அந்தஸ்தை, ஜூலை 15க்குள் வழங்க வேண்டும். இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை, ஆக., 31க்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, செப்., 1ல் வகுப்புகளையும் துவங்க, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தி உள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، مايو 09، 2021
Comments:0
Home
Admission
AICTE
Counselling
ENGINEERING
இந்த கல்வி ஆண்டிற்கான இன்ஜி., கவுன்சிலிங் எப்போது? - AICTEன் உத்தரவு!
இந்த கல்வி ஆண்டிற்கான இன்ஜி., கவுன்சிலிங் எப்போது? - AICTEன் உத்தரவு!
Tags
# Admission
# AICTE
# Counselling
# ENGINEERING
ENGINEERING
التسميات:
Admission,
AICTE,
Counselling,
ENGINEERING
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.