பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – உங்கள் பெயர் இருக்கா? முழு விவரம்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 14, 2021

Comments:0

பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – உங்கள் பெயர் இருக்கா? முழு விவரம்...

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி பணம் வழங்கும் திட்டத்தின் எட்டாவது தவணையை பிரதமர் நாளை வழங்க இருக்கிறார். இந்த திட்டத்தில் உங்கள் பெயரை பதிவு செய்திருந்தால் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களாக என்பதை சரி பார்க்கும் முறையினை இந்த பதிவில் காண்போம்.
பிஎம் கிசான் திட்டம்: நாட்டில் நலிவடைந்த விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும். மத்திய அரசு விவசாயிகளின் நேரடி வங்கிக்கணக்கில் இந்த தொகையை வழங்கும். கொரோனா காலத்தில் விவசயிகளுக்கு உதவும் விதமாக விரைவில் நிதி வழங்க இருப்பதாக அரசு அறிவித்தது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அரசிடம் இருந்து 10,000க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டத்தின் 8 வது தவணைப் பணம் மே 14ம் தேதியான நாளை முதல் வழங்கப்பட உள்ளது. நாளை இஸ்லாமியர்களின் ஈகை திருநாள் கொண்டாட இருப்பதால் பிரதமர் நாளை நிதிஉதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த எட்டாவது தவணைப் பணம் கிட்டத்தட்ட 10 கோடி விவசாயிகளுக்குக் கிடைக்கவுள்ளது. உங்கள் பெயரை சரிபார்க்கும் முறை: முதலில் pmkisan.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், ’farmers corner’ என்பதை கிளிக் செய்து ‘beneficiary list’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். பின்னர் ‘Get information’ என்பதை தேர்வு செய்து இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் மற்றும் விவரங்களை நாம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews