Breaking

Friday, May 14, 2021

10, 12ம் வகுப்பு திறந்தவெளி பள்ளி தேர்வுகள் தள்ளிவைப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திறந்த வெளி பள்ளிக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள்: கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி உட்பட பல கல்வி வாரியங்களும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்தும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து நிலைமை சீரான பிறகு 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னதாகவே 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளையும் சத்தீஸ்கர் இடைநிலைக் கல்வி வாரியம் ஒத்தி வைத்து உத்தரவிட்டது. இதே போல் மாநிலத்தில் மே 24ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை நடக்க இருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திறந்தவெளி பள்ளியின் தேர்வுகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வர முடியாத மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண் முறையினையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கப்படும். உள்மதிப்பீட்டின் படி, மொத்தம் உள்ள 75 மதிப்பெண்களில் அதிகபட்சகமாக 72 வழங்கப்படும். செய்முறை தேர்வுகள் உள்ள பாடத்தின் எழுத்துத் தேர்வுக்கு 30க்கு 29 மதிப்பெண்களும், அதில் 70 க்கு 68 மதிப்பெண்களும் அதிகபட்சமாக வழங்கப்படும். தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog