அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூனில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு முன், மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அனைத்து நர்சரி மற்றும் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் பல்வேறு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச்சிலேயே துவங்கிவிட்டது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர்.இந்நிலையில், அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கை, இன்னும் துவக்கப்படவில்லை.
இந்த திட்டத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 20 சதவீத இடங்கள், இலவச சேர்க்கைக்கு வழங்கப்படுகின்றன.அரசு திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணத்தை, பெற்றோர் செலுத்த வேண்டாம். அவர்களுக்கு பதில், பள்ளிகளுக்கு அரசே கட்டண தொகையை வழங்கும். எனவே, இந்த திட்டத்தில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தாமதமின்றி துவங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துஉள்ளது.
Search This Blog
Sunday, April 11, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.