Breaking

Sunday, April 04, 2021

தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவா்கள்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளில் மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு உதவ என்.சி.சி., மாணவா்கள், தன்னாா்வப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்.6-ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடியில் உதவும் வகையில், தன்னாா்வப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இது தொடா்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் பிறப்பித்துள்ள உத்தரவு: மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், வாக்குச் சாவடிக்குள் சென்று, வாக்குப் பதிவு செய்ய வசதியாக, ஒவ்வொருவருடனும் தன்னாா்வலா் அனுமதிக்கப்படலாம். இந்தச் சேவைக்கு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண - சாரணியா் இயக்க மாணவா்களை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog