தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில், ஓட்டுச் சாவடி பணியாளர்களாக, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர்.அவர்கள், ஏப்., 5ம் தேதியே, தேர்தல் அலுவலர்களாக பொறுப்பேற்றனர். நேற்று முன்தினம் இரவு, ஓட்டு சாவடியிலேயே தங்கி, நேற்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ஓட்டுப் பதிவு, நேற்று இரவு, 7:00 மணிக்கு முடிந்த நிலையில், ஓட்டு பெட்டிகளை, தேர்தல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகள், நள்ளிரவு வரை நடந்தன.
இதைத் தொடர்ந்து, 'தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், இன்று பணிக்கு வர வேண்டாம்' என, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 'இன்றைய விடுமுறைக்கு பதில், வேறு நாளில் பணியாற்ற வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Search This Blog
Wednesday, April 07, 2021
Comments:0
தேர்தல் பணி: ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு இன்று 'லீவு'
Tags
# ELECTION
# GOVT EMPLOYEE
# HOLIDAY
# TEACHERS
TEACHERS
Labels:
ELECTION,
GOVT EMPLOYEE,
HOLIDAY,
TEACHERS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.