நாடு தழுவிய ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 20, 2021

Comments:0

நாடு தழுவிய ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை! கொரோனா தடுப்பு தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசித்த நிலையில், பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை: நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும். கொரோனாவால் உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுகள். புயல் வேகத்தில் கொரோனா இரண்டாம் அலை நம்மை தாக்குகிறது. உங்களது வலியை என்னால் உணர முடிகிறது. உங்கள் குடும்பத்தின் உறுப்பினராக உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன். - பிரதமர் நரேந்திர மோடி.

நாடு தழுவிய ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்! பொது முடக்க அறிவிப்பு - மாநிலங்களுக்கு அதிகாரம்: பொது முடக்கம் என்பது கடைசி வாய்ப்பு தான். பொது முடக்கத்தை செயல்படுத்தும் போது மாநில அரசுகள் அதனை கடைசி ஆயுதமாக தான் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை பூர்த்தி செய்துள்ளோம். மருத்துவ நிபுணர்களின் தொடர் உழைப்பால் கடந்தாண்டு இறுதியில் தடுப்பூசி கிடைத்தது. இவர்களின் அசாதரண உழைப்பால் 2 தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரித்தது. உலகத்தின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இரண்டு உள்நாட்டு தடுப்பூசி மருந்துகளுடன் இந்தியா துவங்கியுள்ளது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். உலகிலேயே நமது நாட்டில் குறைந்த விலையில் கரோனா தடுப்பூசி கிடைக்கிறது. கொரோனாவின் 2வது அலை ஒரு புயல் போல நாடு முழுவதும் வீசி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தேவை கூட்டு முயற்சிதான். எத்தனை சவால்கள் இருந்தாலும் துணிச்சலை ஒரு போதும் இழந்து விட வேண்டாம். புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே இருக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews