மாணவர்களிடம் தேர்வு பயம் உண்டாக்காதீர்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 08, 2021

Comments:0

மாணவர்களிடம் தேர்வு பயம் உண்டாக்காதீர்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

‘‘பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் தேர்வு பயத்தை உண்டாக்காதீர்கள். வெளி அழுத்தம் இல்லாவிட்டாலே மாணவர்களின் நம்பிக்கை பெருமளவு அதிகரிக்கும்’’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தேர்வு பயத்தை போக்கும் முயற்சியாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ‘பரிக்ஷாபி சர்ஷா’ நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள்: தேர்வுகளை பார்த்து மாணவர்கள் பயப்படக் கூடாது. அவை தங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சோதனையாக மட்டுமே பார்க்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்கள் இல்லாவிட்டாலே, மாணவர்கள் தேர்வு பயமின்றி அவர்களின் நம்பிக்கை மேம்படும். எனவே, பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை உண்டாக்காதீர்கள். குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதற்கு பதிலாக அவர்களை நேர்மறையாக ஊக்கப்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்களின் லட்சியம், கனவுகளை பூர்த்தி செய்யும் கருவியாக குழந்தைகளை கருத வேண்டாம். அது எதிர்மறையாக முடியும். மாணவர்கள் எந்த பாடத்தை பார்த்தும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு சிக்கலான விஷயங்கள் என்றால், அவற்றை இரவில் படிப்பதற்கு பதிலாக காலையில் படியுங்கள். புத்துணர்வுடன் படிக்கும் போது பாடங்கள் நன்கு புரியும். இதே யுக்தியை தான் நானும் பின்பற்றுகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews