வங்கிகள் வேலை நேரங்களில் மாற்றம் – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أبريل 23، 2021

Comments:0

வங்கிகள் வேலை நேரங்களில் மாற்றம் – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளதால் வங்கி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கி செயல்பாடு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் பேங்க் அசோசியேஷன் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஊழியர்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைத்து பணியாளர்கள் சுழற்சி முறையில் அலுவலகம் வருவதற்கும் இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது. மேலும், மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகளை நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது.
பிளஸ் 2 மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகளை தொடா்ந்து நடத்த உத்தரவு.
அடிப்படை சேவைகள்:
இதனால் இனி வங்கிகளில் பணம் டெப்பாசிட், வித்டிரா, பணம் அனுப்புதல், அரசு சேவைகளுக்கான பணம் செலுத்துதல் போன்ற 4 அடிப்படை சேவைகள் மட்டுமே இருக்கும். கடின சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு மக்கள் முன்கூட்டியே பணிகளை திட்டமிடுதல் நல்லது. வங்கி ஊழியர்கள் அமைப்பு கொரோனா பரவல் காரணமாக வேலை நேரத்தை மாற்ற இந்தியன் பேங்க் அசோசியேஷனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பிய நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 2,900 கள உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு!
பாதிப்பு:
கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் 600 வங்கித்துறை ஊழியர்கள் மரணமடைந்து உள்ளனர் என்று IBA அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டினுள் இருந்து பணியாற்ற முடியும் ஊழியர்களுக்கு Work From Home வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது. மே 1ம் தேதி முதல் அனைத்து வங்கி ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة