ரூ.78 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أبريل 04، 2021

Comments:0

ரூ.78 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குள்பட்ட சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (Finance and Accounts)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.78,80 - 2,09,200

பணி: Manager (Finance and Accounts)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

பணி: Deputy Manager (Finance and Accounts)
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.56,100 - 1,77,500 வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல், கணக்கியல் அல்லது மேலாண்மை கணக்கியல் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது வர்த்தக நிர்வாகவியல் (நிதி) பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். அல்லது மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: GM (HR & Admin)-I, A, National Highways Authoirty of India, Plot no: G-5 & 6, Sector - 10, Dwarka, New De;hi - 110075
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2021
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt_for_Finance_Cadre_posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة