2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: அச்சுறுத்தும் 8 அறிகுறிகள்..! அலட்சியம் செய்தால் ஆபத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 12, 2021

Comments:0

2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: அச்சுறுத்தும் 8 அறிகுறிகள்..! அலட்சியம் செய்தால் ஆபத்து

கொரோனா வைரஸ் 2வது அலை காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. இதன் வேகம் மட்டுமின்றி அறிகுறிகளும் முதல் அலையை விட வேறுபட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த 2வது அலை நம்மை உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கி விட்டது. கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலத்திலும் பாதிப்புக்கு ஏற்ப பகுதி நேர ஊரடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை போல, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க மத்திய அரசு விரும்பவில்லை என பிரதமர் மோடி கூறியிருந்தாலும், தினசரி பாதிப்பு தினமும் 1.5 லட்சத்தை நெருங்கி இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முதல் அலையைப் போல் இல்லாமல் 2வது அலை காட்டுத் தீ போல வேகமாக பரவி வரும் நிலையில் அதன் அறிகுறிகளும் சற்று வித்தியாசமாக, புதிதாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன. காய்ச்சல், சளி, வயிற்று வலி, மூச்சுத் திணறல் போன்றவை முதல் அலையின் பொதுவான அறிகுறியாக இருந்தன. ஆனால், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பிரத்யேக அறிகுறிகள் 2வது அலையில் உள்ளன. வழக்கமான சளி, காய்ச்சல் இல்லாமல் தென்படும் இந்த அறிகுறிகள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மக்கள் அலட்சியப்படுத்தாமல் பரிசோதித்து கொள்ள வேண்டும் என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2வது அலை கொரோனாவின் அறிகுறிகள்:. கண்கள் சிவத்தல்: சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கண் சிவத்தல் அல்லது வெண்படல அழற்சி கொரோனா தொற்றின் அறிகுறியாகும். கண் சிவத்தல், வீக்கம் போன்றவை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்கலாம். அசாதாரண இருமல்:முதலில் வந்த கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகளில் இருமல் ஒன்றாகும். வைரஸ் முதன்மையாக மேல் சுவாசக் குழாயைத் தாக்குகிறது. இருப்பினும், 2வது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல் வழக்கமான ஒன்றாக இருக்காது. தொடர்ச்சியான இருமலாக இருப்பதோடு குரலையே அது மாற்றிவிடும். செவித்திறன் குறைபாடு: 2வது அலை வைரஸ் செவிப்புலன் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச ஆடியோலஜி மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் அதுகூட கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம். சோர்வு: எந்தவொரு நோய் அல்லது வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பிறகு, உடல் முழுமையாக குணமடைய நேரம் எடுக்கும். ஆனால், கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் சோர்வில் இருந்து விடுபடுவதற்கான காலம் 6 மாதங்கள் வரை நீடிக்கும். நினைவாற்றல் இழப்பு: 2வது கொரோனா நோயாளிகளில் 58% பேர் மனக்குழப்பம் அறிகுறியை சந்தித்துள்ளனர். திடீரென சில விஷயங்கள் மறத்தல், குழப்பநிலை ஏற்படுதல் போன்றவையும் புதிய அறிகுறியாகும். இதுமட்டுமில்லாமல், நினைவாற்றல் இழப்பு, தூக்கமின்மை உள்ளிட்ட நரம்பிய பிரச்னைகளும் பதிவாகியுள்ளன. வாசனை இழப்பு: கொரோனாவில் மிகவும் எரிச்சலூட்டும் அறிகுறிகளில் ஒன்று வாசனை மற்றும் சுவை இழப்பு. வாசனை இழத்தல் மற்றும் சுவை இழப்பு பிரச்னையை சமாளிப்பது கடினமாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். வயிற்றில் தசைப்பிடிப்பு: வழக்கத்துக்கு மாறாக, 2வது அலையில் பரவி வரும் உருவமாறிய கொரோனாவால் வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால், வலி உயிர் போகும். இதயதுடிப்பு அதிகரிப்பு: இதயத்தில் அழுத்தம் ஏற்படும். இதய துடிப்பின் வேகமும் அதிகரிக்கும். இது, இதய நோய்ககான அறிகுறியாக கூட இருக்கலாம். குறிப்பாக, இதய துடிப்பு அதிகரித்தால், அது 2வது அலை கொரோனாவின் தாக்குதலாக இருக்கலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews