தமிழகத்தில் கல்லூரிகள், தொழில் நிறுவனங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்துங்கள் : தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 23, 2021

Comments:0

தமிழகத்தில் கல்லூரிகள், தொழில் நிறுவனங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்துங்கள் : தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில வாரங்களாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. மே மாதத்தில் பாதிப்பு உச்சத்தில் இருக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கொரோனா மையங்களாக பயன்படுத்துமாறு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அரசு கல்லூரிகளாக மாறியும் மாறாத சம்பளம் கவலையில் கவுரவ விரிவுரையாளர்கள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா மையங்களை உயர்த்த வேண்டும். கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மையங்களாக மாற்றிக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர்கள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.அதே போல, பாதிப்பு ஏற்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து சோதனை மேற்கொள்ள வேண்டுமென்றும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவேண்டுமென்றும் ஆக்சிஜன், பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை ரூ.11 கோடியே 50 லட்சம் கொரோனா விதிமீறல் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews