சினிமா சார்ந்த இலவச திறன் பயிற்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مارس 13، 2021

Comments:0

சினிமா சார்ந்த இலவச திறன் பயிற்சி!

'கிராபிக் டிசைனர்' மற்றும் 'டிஜிட்டல்' படத் தொகுப்பு தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் பயிற்சியை, வரும், 15ம் தேதி முதல், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் நடத்துகிறது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு அறிவிப்பு - தேர்வு துறை உத்தரவு!
இது குறித்து, தேசிய திரைப்பட வளர்ச்சி கழக பொது மேலாளர் டி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில், டிஜிட்டல் படத் தொகுப்பு, 'வீடியோ எடிட்டிங்' சார்ந்த, 240 மணி நேரம், இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அதே போல, 430 மணி நேரம், கிராபிக் டிசைனர் திறன் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வாயிலாக, செய்தித்தாள், உள்ளூர் போட்டோ ஸ்டூடியோ, சினிமா, 'டிவி'க்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.வரும், 15ம் தேதி துவங்கும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பு முடித்த, 18 முதல், 35 வரையிலான ஆண், பெண் இருபாலரும் சேரலாம். நேரடி முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் விபரங்களை, 044 - 2819 1203, 2819 2506, 2819 2407 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة