இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: யுஜிசி விதிமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 22, 2021

Comments:0

இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: யுஜிசி விதிமுறை

இரட்டை அல்லது கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை யுஜிசி இறுதி செய்துள்ளது. எனினும் மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி (கூட்டுப் பட்டம், இரட்டைப் பட்டங்களை வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கல்வி புரிந்துணர்வு) விதிமுறைகள், 2021 வரைவறிக்கையின்படி, ''இந்திய உயர் கல்வி நிறுவ்னங்கள் வெளிக்நாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிறுவன அங்கீகாரம், பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பட்டப் படிப்புகளை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எனினும் ஆன்லைன் மற்றும் திறந்தநிலை, தொலைதூர வழிக் கற்றலுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.
5,000 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!
3.01 தரத்துடன் 'நாக்' என அழைக்கப்படும் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் அங்கீகாரம் (NAAC) பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ள இந்தியக் கல்வி நிறுவனங்கள் அல்லது உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கலாம். எனினும் பிற கல்வி நிறுவனங்கள் யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டும்'' என்று வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ''படிப்பை முறையாக முடித்தவுடன் இரட்டைப் பட்டப் படிப்புகளை (Dual Degree) வழங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் பட்டங்கள் வழங்கப்படும். அதே நேரத்தில் கூட்டுப் படிப்பு (Joint Degree) ஒரே சான்றிதழாக வழங்கப்படும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூரக் கல்வி மூலம் B.Ed., படிப்பை நடத்த NCTE, UGC அனுமதி
அதேநேரத்தில், மக்களின் கருத்துக் கேட்புக்காக வைக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை மீதான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews