JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்.25 வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 17، 2021

Comments:0

JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்.25 வரை நீட்டிப்பு

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்துJEE நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்காக இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் JEE மெயின்தேர்வில் வெற்றி பெறுவதற்கான சரியான வழிகாட்டுதலும், முறையான பயிற்சியும் வழங்கும் நோக்கில் FIITJEE பயிற்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெறஉள்ளது. இதில் பங்கேற்க ஏராளமான மாணவ-மாணவிகள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால்நடைத்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

இதற்கென நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்யப்படும் 7,500 மாணவர்களுக்கு FIITJEE பயிற்சி நிறுவனம் ரூ.9,400மதிப்புள்ள JEE மெயின் தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்கும். முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விவரங்கள் குறித்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் jeepractice@amrita.edu, vadivel.k@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு கடிதம் எழுத வேண்டும். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 9840961923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உயர் கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்களை விரிவாக்கம்!

அதேபோல் பங்கேற்கும் மாணவர்கள் https://bit.ly/3jlpZ37 என்ற இணையத்தில் பிப்.25-க்குள் பதிவுசெய்ய வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது. கூடுதல் தகவல்களுக்கு 180042590009 என்ற எண் ணில் தொடர்புகொள்ளலாம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة