1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற கல்வி உதவித்தொகை தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 22, 2021

Comments:0

1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற கல்வி உதவித்தொகை தேர்வு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகைக்கான தேசிய அளவிலான திறன் தேர்வு, நேற்று தமிழகம் முழுதும் நடந்தது.
கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி?
பள்ளி மாணவர்களுக்கு, 8 மற்றும், 10ம் வகுப்புக்கு பின், மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற, தேசிய அளவில் திறன் தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்று முன்னிலை பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, என்.எம்.எஸ்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, நேற்று தமிழகம் முழுதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். காலை, பிற்பகல் என, இரண்டு வேளைகளில், இரண்டு வகை வினாத்தாள்களுக்கு தேர்வு நடந்தது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!
கொரோனா விதிகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, இத்தேர்வு நடத்தப்பட்டது. எட்டாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்காத போதும், ஆன்லைன் என்றில்லாமல், நேரடியாக நடத்தப்பட்ட இந்த தேர்வில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews