பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை
கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ேநற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். அது அவர்கள் விருப்பம். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் போன்றவர்களுக்கு மட்டும் தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு கூறிய பிறகு தடுப்பூசி போடப்படும். பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாத பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
மற்ற வகுப்புகள் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் தான் அறிவிப்பார். பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினா
Search This Blog
Tuesday, February 02, 2021
1
Comments
Home
CORONA
MINISTER
TEACHERS
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
முதலில் மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள் என்ன சோதனை கருவிகள்?
ReplyDelete