நீட் தோ்வு விடைத்தாள் முறைகேடு தொடா்பாக, சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிப்பது குறித்து வரும் 21-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், கோவையைச் சோ்ந்த மனோஜ் என்ற மாணவன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தேசிய தோ்வு முகமை, நீட் தோ்வு விடைத்தாள்களை கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. அதில், நான் 700 மதிப்பெண்களுக்கு 594 மதிப்பெண் பெற்ாக இருந்தது. பின்னா், கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி எனது மதிப்பெண் 248-ஆக குறைத்து காட்டப்பட்டது. எனவே, ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்த 594 மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, என்னை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘மனுதாரை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டது. ‘அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் பட்சத்தில், அது இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது’ எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தோ்வு முகமை தரப்பில், கூடுதல் மதிப்பெண் பெற்ாக மாணவா் தாக்கல் செய்த மதிப்பெண் சான்று போலியானது எனவும், மனுதாரா் 248 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘உண்மையைக் கண்டறிய விசாரணை தேவை. என் மீது தவறு இருந்தால் சட்ட ரீதியான பின் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அப்போது மருத்துவக் கலந்தாய்வு அமைப்பு தரப்பில், ‘மனுதாரருக்கு ஏற்கெனவே தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவை காரணமாக சோ்க்கை வழங்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை வழங்க உத்தரவிட்டாா். மேலும், சுதந்திரமான ஓா் அமைப்பைக் கொண்டு விசாரிப்பது குறித்து வரும் 21-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, ‘மனுதாரா் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அவரது படிப்பைக் கைவிட வேண்டும். அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மாணவா் மட்டுமல்லாமல் அவரது பெற்றோரும் சட்டவிளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுத்து, விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Search This Blog
Thursday, January 14, 2021
Comments:0
Home
CORRUPTIONS
NEET/JEE
நீட் தோ்வு விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் தனி விசாரணை அமைப்பு: ஜன.21-இல் முடிவு
நீட் தோ்வு விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் தனி விசாரணை அமைப்பு: ஜன.21-இல் முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.