டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பெரியார், கோவிட் வைரஸ் பற்றிய அதிக அளவில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடத்துக்கு முதல்நிலை தேர்வை நேற்று நடத்தியது. தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நாட்டு நடப்புகள், அன்றாட நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக தந்தை பெரியார் சம்பந்தமாக, 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டின் யார் முதல்வராக இருந்தார்.
தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம். தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக்கூறப்பட்டது யாது. முதலாவது சென்னை மாநில, சுயமரியாதை மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர் யார். நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறுக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது. மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூக நீதி சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் என்று கூறியவர் யார். தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர். தந்தை பெரியார், மக்கள் தங்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது. தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார்.
தாழ்ந்த சாதி மருத்துவர் தவறான ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும். நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது. இவ்வாறு கூறியவர் யார். என்று நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதை போல உலகத்தையை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாகவும் அதிக அளவில் கேள்விகள் இடம் பெற்றிருந்தது. இந்திய பொருளாதாரத்தில், கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகள். கோவிட் 19 தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியான கூற்றை தேர்வு செய்யவும், கோவிட் 19 தொடர்பானவை எவை என்று காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, சுவை அறியும் திறன் இல்லாமல் பேசுவது, தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம் என்று விடைகள் அளிக்கப்பட்டு இதில் சரியானது எது என்று கேட்கப்பட்டிருந்தது.
இதே போல எந்த கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது என்று கேள்வி ேகட்கப்பட்டிருந்தது. அதில் வகுப்புவாதம், பொதுவுடமை, மக்களாட்சி, சோஷியலிசம் என்று 4 விடைகள் அளிக்கப்பட்டு, சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனால் எழுதப்பட்ட வேள்பாரி என்ற நூலின் படி உள்ள சரியானவை கூற்றை தேர்வு செய்யவும். தலைசிறந்த படைப்பான ‘‘பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்று கேள்விகள் இடம் பெற்றிருந்தது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.