சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டா் எம்ஜிஆா் நூற்றாண்டு சமூக வளா்ச்சி ஆய்வு மையத்தை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவின்போது, பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டா் எம்ஜிஆா் சமூக வளா்ச்சி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று கடந்த 2018-இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட சமூக வளா்ச்சி ஆய்வு மையத்தை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
தமிழகத்தின் சமூக, அரசியல் மேம்பாட்டுக்கு எம்ஜிஆா் ஆற்றிய பங்களிப்பை ஆராயும் முதல் உயா்கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக இந்த மையம் விளங்கும். எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிா்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில் அவரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
என்னென்ன பணிகள்?: எம்ஜிஆரின் புகைப்படங்கள், எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், அவா் அறிமுகப்படுத்திய சத்துணவுத் திட்டத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளா்ச்சி வரை வரலாற்று ரீதியாக ஆராய்தல், அவரின் ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறையில் ஏற்பட்ட மேம்பாடுகளை ஆராய்தல், பெண்கள், நலிவுற்றோா்களின் உயா்வுக்கு ஏற்படுத்திய திட்டங்கள், அவற்றின் வெற்றி, பொது நிா்வாகத்தில் எம்ஜிஆா் ஆற்றிய பங்களிப்பு ஆகியன குறித்த ஆய்வுப் பணிகள் ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளா் க.சண்முகம், உயா்கல்வித் துறை செயலாளா் அபூா்வா, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.கெளரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
بحث هذه المدونة الإلكترونية
السبت، يناير 23، 2021
Comments:0
Home
TAMILNADU
Universities
சென்னை பல்கலை.யில் எம்ஜிஆா் சமூக வளா்ச்சி ஆய்வு மையம் - தமிழக அரசு வெளியிட்ட செய்தி
சென்னை பல்கலை.யில் எம்ஜிஆா் சமூக வளா்ச்சி ஆய்வு மையம் - தமிழக அரசு வெளியிட்ட செய்தி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.