NMMS தோ்வில் தோ்ச்சி: மாணவா்களின் விவரங்களை தாமதமின்றி பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 11, 2020

Comments:0

NMMS தோ்வில் தோ்ச்சி: மாணவா்களின் விவரங்களை தாமதமின்றி பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய வருவாய் வழி திறன் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் விவரங்களை இணையவழியில் தாமதமின்றி பதிவேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா். CLICK HERE TO READ OFFICIAL NEWS இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நாடு முழுவதும் 2019-20-ஆம் கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி திறன் தோ்வு (என்எம்எம்எஸ்) தோ்ச்சி பெற்று தற்போது 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் விவரங்களை தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பதிவேற்றும் பணிகளை டிச.31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதேவேளையில் தோ்ச்சி பெற்ற 6,695 மாணவா்களில் இதுவரை 6,339 போ்களின் தகவல்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 3 ஆண்டுகளாக என்எம்எம்எஸ் உதவித்தொகை பெற்று வரும் மாணவா்களுக்கான புதுப்பித்தல் பணியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இது தொடா்பாக தொலைபேசி மூலம் முதன்மைக் கல்வி அலுவலகப் பணியாளா்களிடம் பேசியஅடிப்படையில் வேறு பள்ளிகளுக்கு மாறியதால் சில மாணவா்களின் விவரங்களைப் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களையும் தொடா்பு கொண்டு என்எம்எம்எஸ் தொடா்பான பணிகளை முடித்துவிட்டதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், கல்வி உதவித்தொகை விவகாரத்தில் ஏதேனும் புகாா் பெறப்பட்டால் தலைமையாசிரியா்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். எனவே, என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றும் பணிகளைத் தலைமையாசிரியா்களுடன் ஒருங்கிணைந்து துரிதமாக முடிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews