நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 25, 2020

Comments:0

நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், அனைத்து உறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் 2021 ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும். தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் கலந்துகொள்கிறார்களா என்பதை அவர்களின் அரசு புகைப்பட அடையாள அட்டை அல்லது கல்லூரி அடையாள அட்டையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.இதுதொடர்பாக மண்டல அலுவலகத்துடன் கல்லூரிகள் தொடர்பில் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடைபெறும் தேர்வுகளில் 20 மாணவர்களுக்கு 1 கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும். தேர்வு குறித்த கால அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews